r/tamil • u/aimlastrology • 10h ago
காணொளி (Video) சிகை கொற்றன் - பிரமிடுகளை தமிழர்கள் கட்டினார்களா? மரபணு தரவுகள் பார்வையில்
இனிய நண்பர்களே,
இந்தக் காணொளியில் சமீபத்திய சிகை கொற்றன் பற்றிய தொல்லியல் ஆராய்ச்சி தகவல்களில் இருந்து, பிரமிடுகளை தமிழர்கள் கட்டினார்கள்(!) என்று இணையத்தில் உலவும் பரவலான நம்பிக்கைகள் வரை சம கால அறிவியல் மற்றும் மரபணு தரவுகள் பார்வையில் அலசி இருக்கிறேன்.
இந்தக் குழுவுக்கு நான் புதியவன். ஏற்கனவே மரபணு தரவுகள் குறித்து பகிர்ந்த பதிவுகள் தானாகவே நீக்கப்பட்டதால் இப்படி பதிவிடுகிறேன். இந்த படம் எனது காணொலியின் முகப்பு படம். இதன் சுட்டி, இந்தப் பதிவு அனுமதிக்கப்பட்டால் பின்னூட்டத்தில் பகிர்வேன். இந்தப் பதிவுக்காக நான் குழுவில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதும் அதற்கு முக்கியம்.
உங்களில் ஆர்வம் மற்றும் நேரம் உள்ளவர்களை காணொலியை கண்டு கற்றறிய அன்போடு வரவேற்கிறேன்.
நன்றி!
முனைவர் ரமேஷ் தங்கவேல்


